1. Home
  2. தமிழ்நாடு

தவெக கொடி கட்டிய காரில் வந்த நடிகை அபிராமி..!

1

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குகிறது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும் கட்சி வளர்ச்சி பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த மாதம் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநட்டை நடத்தினார். இந்த மாநாட்டில், பேசிய விஜய், தமிழகத்தில் ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

மேலும் தங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என விஜய் பேசினார். விஜய் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த திட்டமிட்டுள்ள விஜய், விரைவில் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லபடுகிறது. விஜய் அறிவுறுத்தலின் பேரில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மாவட்ட வாரிய சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

தவெக மாநாட்டிற்கு பிறகு விஜய் கட்சியில் சேர பலரும் ஆர்வம் காட்டுவதாகவும் சொல்லப்பட்டது. நடிகர் விஜய் திரைத்துறையில் இருந்து வந்து இருப்பதால்பதால் சினிமா பிரபலங்கள் பலரும் அவருடைய கட்சியில் இணையலாம் என பேச்சு எழுந்தது. தாடி பாலாஜி, ஸ்ரீமன் உள்ளிட்ட ஒரு சிலரை தவிர பெரிய அளவில் யாரும் கட்சியில் இணையவில்லை. இதனிடையேயான் நடிகை அபிராமி, விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டாரா என சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் இடையே விவாதம் எழுந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை அபிராமி தவெக கொடி கட்டிய காரில் வந்து இறங்கினார்.

அவர் வந்த காரின் முன்பக்கத்திலும் விஜய் புகைப்படம் இருந்தது. இதனால், அபிராமி தவெகவில் இணைந்துவிட்டாரா? என நெட்டிசன்கள் பேசி வருகிறார்கள். எனினும், நடிகை அபிராமி தரப்பில் இதுகுறித்து எந்த தகவலும் சொல்லப்படவில்லை.

Trending News

Latest News

You May Like