பிரபல நடிகரின் தாயார் காலமானார்..!
மீண்டும் கோகிலா படம் மூலம் ஸ்டன்ட் மாஸ்டராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் பெப்சி விஜயன். இவரது தந்தை மாஸ்டர் சாமிநாதன் நடிகர் எம்.ஜி.ஆர்ரின் பலப் படங்களில் ஸ்டன்ட் கோரியோகிராஃபராகப் பணியாற்றியவர்.
தந்தை வழியை பயணித்த விஜயனும் ஸ்டன்ட் மாஸ்டராகத் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு நடிகராக ‘தில்’, ‘பாபா’, ‘வில்லன்’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்டப் பல படங்களில் இவர் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் இவரது டேய்...டேய்...டேய் காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரைப்படத் துறையின் சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.மேலும் தெலுங்கு, மற்றும் தமிழில் ஓரிரு படங்களை இயக்கி உள்ளார்.
இந்த நிலையில் பெப்சி விஜயனின் தாயார் கோகிலா இன்று காலை காலமானார். அவரின் இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.