1. Home
  2. தமிழ்நாடு

‘தல’ தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் யோகி பாபு!

1

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் என நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய காமெடி நடிகராக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்

இந்நிலையில் நடிகர் யோகி பாபு கேப்டன் கூல் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அதில் தோனி அவர்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, தலைவர். நல்ல இதயம் கொண்ட மனிதர், உங்களுக்கு 42வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவித்துள்ளார் 


 


சில தினங்களுக்கு முன் கூட கேப்டன் தோனி நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு தன்னுடைய பேட் ஒன்றை பரிசாக அளித்தார்.அந்த பேட்டை வாங்கிய நடிகர் யோகிபாபு அந்த பேட்டிற்கு முத்தம் கொடுத்து கேப்டன் டோனிக்கு நன்றி தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like