6 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் நடிகர் யோகி பாபு!
"லொள்ளு சாப" தொடரில் சிறு வேடங்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய யோகி பாபு இவர் வெள்ளித்திரையில் யோகி திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் இவர் தனது பாபு என்னும் பெயரினை யோகி பாபு என தமிழ் திரைத்துறையில் மாற்றியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு வெளியான மான் கராத்தே திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள "வௌவால்" கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்திற்கு சென்று பிரபலமானது.தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நடித்து வந்துள்ள இவர், சில காலத்திற்கு பின்னர் நாயகனாகவும் நடிக்க தொடங்கியுள்ளார். இவரது முன்னணி நடிப்பில் தர்ம பிரபு, காக்டெய்ல், பண்ணி குட்டி, கூர்க்கா என பல படங்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் யோகி பாபு நலிந்த நடிகர்களுக்க உதவும் வகையில் நிதி உதவி வழங்கியுள்ளார்.தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவரும், நடிகர் சங்க அறக்கட்டளையின் உறுப்பினருமான பூச்சி முருகனிடம் ரூ. 6 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.