1. Home
  2. தமிழ்நாடு

புதுச்சேரி முதல்வருடன் நடிகர் யோகிபாபு சந்திப்பு..!

1

புதுச்சேரி அரியாங்குப்பம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. கும்பாபிஷேக விழாவில் நடிகர் யோகிபாபு கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்த சட்டசபைக்கு வந்தார். அங்கு முதலமைச்சரை சந்திக்க வந்தார். முதலமைச்சர் தனது அறையில் கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்ததால் கேபினட் அறையில் காத்திருந்தார். சிறிது நேரத்துக்கு பின் முதலமைச்சரை யோகிபாபு சந்தித்தார். அப்போது முதலமைச்சருக்கு நடிகர் யோகிபாபு சால்வை அணிவித்தார்.

தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி, அவருக்கு சால்வை அணிவித்தார். தொடர்ந்து யோகிபாபுவிடம் நலம்விசாரித்த ரங்கசாமி, சொந்த ஊர் சென்னைதானா? என கேட்டார். அதற்கு யோகிபாபு, தனக்கு பூர்வீகம் ஆற்காடு என்றும், பிறந்தது சென்னை. தனது தந்தை ராணுவத்தில் வேலைபார்த்தவர். நானும் ஆசைப்பட்டு ராணுவத்துக்கு சென்று ஓராண்டில் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்தார்.

யோகிபாபு

தற்போது என்ன படம் நடிக்கிறீர்கள்? என்ன படம் வெளியாகியுள்ளது? என ரங்கசாமி கேட்டார். அதற்கு நடிகர் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்தேன். தற்போது லக்கிமேன் என்ற படம் வெளியாகியுள்ளது என தெரிவித்த யோகிபாபு, நீங்கள் படம் பார்ப்பீர்களா? என கேட்டார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, முன்பு நான் தியேட்டருக்கே சென்று படம் பார்ப்பேன். தற்போது அதற்கான நேரமும், வசதியும் இல்லை. ஆனால் சாப்பிடும்போது, வீட்டில் ஓய்வாக இருக்கும்போது டிவியில் ஒளிபரப்பாகும் படங்களை பார்ப்பேன் என்றார்.

தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரம் ஏதாவது நடிக்கிறீர்களா? என முதலமைச்சர் கேட்டார். பெண் வேடத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக யோகிபாபு தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட யோகிபாபு, முதலமைச்சர் ரங்கசாமி காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அப்போது திருநீறு இட்டு, நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று ரங்கசாமி வாழ்த்தினார்.

Trending News

Latest News

You May Like