இந்தியாவிற்கு பாரத் என பெயர் :சேவாக்கின் ஆதரவும் நடிகர் விஷ்ணு விஷாலின் எதிர்ப்பும்..!

இந்தியாவின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்து குடியரசு தலைவர் மாளிகை பயன்படுத்தியிருப்பது நாடு முழுவதும் மிக முக்கியமான பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து விரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் பெயர் நமக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன்.நாங்கள் பாரதியர்கள், இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட பெயர். பாரத் என்ற உண்மையான பெயரை திரும்பப் பெறுவதற்கு நீண்ட கால தாமதமாகிவிட்டது. இந்த உலகக் கோப்பை போட்டியில் நமது வீரர்கள் பாரதத்தை நெஞ்சில் சுமப்பதை பிசிசிஐ மற்றும் ஜெய்ஷா ஆகிய இருவரும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
விரேந்திர சேவாக்கின் இந்த கருத்துக்கு பதிலளித்த நடிகர் விஷ்ணு விஷால், என்ன இந்தியாவின் பெயரை மாற்ற போகிறார்களா. இது நமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் எவ்வாறு உதவும்? சமீப காலமாக வந்த விசித்திரமான செய்தி இது. இந்தியா எப்போதும் பாரதமாகவே இருந்து வருகிறது. நம் நாட்டை இந்தியா என்றும் பாரத் என்றும் அறிந்துள்ளோம். ஏன் திடீரென்று இந்தியாவை துறக்க வேண்டும். இத்தனை வருடங்களாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Sir with due respect…
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) September 5, 2023
The name INDIA didn instill pride in you all these years?? https://t.co/ibm68uZ7e8
Sir with due respect…
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) September 5, 2023
The name INDIA didn instill pride in you all these years?? https://t.co/ibm68uZ7e8