முறைகேடு புகார் அளித்த நடிகர் விஷாலின் மேலாளர் கார் கண்ணாடி உடைப்பு !
நடிகர் விஷால் சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
நடிகர் விஷாலிடம் மேலாளராக ஹரி கிருஷ்ணன் என்பவர் பணி புரிபவர். இவர் கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் வசித்து வருகிறார். ஹரி அவரது காரை வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே நிறுத்திச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று அவரது கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஹரி இது குறித்து கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் விஷால் அலுவலகத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா என்பவர் 45 லட்சம் ரூபாய் மோசடி செய்து கையாடல் செய்து விட்டதாக, விஷால் மேலாளர் ஹரி விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திடீரென அவருடைய கார் கண்ணாடி உடைக்கபட்டிருப்பதால், அந்த புகாரில் தொடர்புடையவர்களுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இது குறித்தும் போலீசார் விசாரணை வருகின்றனர்.
newstm.in