1. Home
  2. தமிழ்நாடு

அரசியல் வருகை குறித்து கேள்விக்கு மக்களை கை காட்டிய நடிகர் விஷால்..!

1

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் மீது உங்களின் எதிர்பார்ப்பு என்னவென கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய விஷால், “தமிழ்நாட்டில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்து ஆராய வேண்டும் என பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன். காரணம் இரட்டை வரி வசூலிக்கும் ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ”ஒரே நாடு ஒரே வரி” என நீங்கள் சொன்னபோது நான் உங்களை நம்பினேன், ஆனால் எதற்காக தமிழ்நாட்டில் மட்டும் இப்படி நடக்கிறது? ஏன் யாருமே இந்த விவரகாரம் பற்றி கவலை கொள்வதில்லை. இது திரையுலகை மிகவும் மோசமாக பாதிக்கிறது.

8% அதிகமாக உள்ளாட்சி வரி செலுத்துவது அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் பெரிய சுமையாக உள்ளது. இன்று திரையுலகம் ரத்தம் சிந்திக் கொண்டுள்ளது.  இந்த வருடம் திரையுலகிற்கு மிக மோசமான வருடங்களில் ஒன்றாகும். அந்த வலியை இந்திய திரையுலகம் வெளியே காட்டுவதில்லை.  ஏனென்றால் அவர்கள் அதை தங்களுக்குள்ளே மறைத்துவைத்துக் கொண்டு, தங்கள் இழப்புகளைப் பற்றி பேச மாட்டார்கள். பட்ஜெட் மூலம் எல்லோரும் சாதாரண வாழ்க்கையை வாழ வாய்ப்பு அளியுங்கள்,  நாங்கள் ஆடம்பர வாழ்க்கையைக் கேட்கவில்லை. வசதியான காரையோ வசதியான வீட்டையோ கேட்கவில்லை. நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். நீங்கள் எதிர்காலத்திற்கான சிறந்த பட்ஜெட்டை வழங்குவீர்கள். ஒவ்வொரு குடிமகனுக்கும் பயனளிக்கும் வகையில் பட்ஜெட் இருக்கும் என நம்புகிறேன்” என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் விஷால், நான் அரசியலுக்கு வரணுமா..? வேண்டாமா.?? மக்கள் தான் முடிவு சொல்ல வேண்டும்.. என தெரிவித்துள்ளார் 

Trending News

Latest News

You May Like