1. Home
  2. தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு நடிகர் விஷால் பாராட்டு..!

1

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். 

இந்நிலையில் பிரதமர் மோடியை நடிகர் விஷால் பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அன்புக்குரிய பிரதமர் மோடியின்  மற்றுமொரு சாதனை இது. உங்களுக்கு எனது வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீராம்.

ராமர் கோவில் இன்னும் பல ஆண்டுகள் நினைவுகூரப்படும். இந்த தருணத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவருக்கும் தலைமுறை தலைமுறைகளாக இங்கு வந்து, அஞ்சலி செலுத்துவார்கள். உங்களுக்கு எனது சல்யூட் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இவ்வாறு அந்த பதிவில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.  


 

Trending News

Latest News

You May Like