தீவிர அரசியலில் கவனம் செலுத்த நடிகர் விஜய் திட்டம்?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பு வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட்டாகும். சமீபத்தில் நடித்த வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் விஜய் மக்கள் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 234தொகுதிகளின் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். அப்போது மாணவர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை , விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி ஏராளமான பொதுநலன் சாந்த விஷயங்களை செய்து வருகிறார். விஜய்யின் பிறந்தநாள் சமயங்களில் இந்த இயக்கம் சார்பில் ரத்த தான முகாம், அன்னதானம். நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்றவை செய்யப்படுகின்றன. இந்நிலையில் தற்போது மெல்ல மெல்ல விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியல் வருகை குறித்து விஜய் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது செயல்பாடுகள் அவர் அரசியலுக்கு விரைவில் வர உள்ளார் என்பதையே காட்டுகிறது.
ஏற்கனவே அரசியலில் ஆர்வம் காட்டி வந்த விஜய் தற்போது தீவிர அரசியலில் இறங்க உள்ளதால் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக மூன்று ஆண்டுகளுக்கு நடிப்பில் இடைவெளி விட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.