TVK என்ற பெயரை நடிகர் விஜய் கட்சியினர் பயன்படுத்த முடியாது
விஜய் எப்போது அரசியலில் கால்பதிப்பார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, விஜய் வெளிப்டையாகவே தான் அரசியலில் ஈடுபடபோவதை தெரிவித்தார். தனது கட்சின் பெயரை அறிவித்தார் 'தமிழக வெற்றி கழகம்' தான் ஏற்றுக்கொண்ட அனைத்து திரைப்படங்களின் வேலைகளையும் முடித்து கொடுத்தப்பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் கட்சி பெயருக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. தமிழக வெற்றி கழகம் என்பதன் ஆங்கில சுருக்கம் TVK என்பதாகும். இந்த பெயரில் ஏற்கெனவே தமிழக வாழ்வுரிமைக் கட்சி (TVK) செயல்பட்டு வருகிறது. இதனால், TVK என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ள வேல்முருகன், விஜய்-க்கு TVK எனும் பெயரை தேர்தல் ஆணையம் வழங்காது; வேறு பெயரை பரிசீலனை செய்யும்படி அறிவுறுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.