1. Home
  2. தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் செய்தார் நடிகர் விஜய்..!

Q

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கியுள்ளார். கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் இன்று (ஆகஸ்ட் 22) நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.    

பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், நிர்வாகிகள் முன்னிலையில் இன்று காலை 9.25 மணிக்கு கட்சிக் கொடியை அறிமுகம் செய்தார். இருபுறமும் யானை, வாகை மலருடன், சிவப்பு, மஞ்சள் நிறத்தில் கட்சிக்கொடி அமைந்துள்ளது. கொடியை அறிமுகம் செய்த பின்னர் அருகில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில், கட்சிக்கொடியை ஏற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டத் தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டரணி, மாணவரணி, மகளிர் அணி, இளைஞரணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணி தலைவர்கள் என 300 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர். முன்னதாக கொடி அறிமுக நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றனர். விஜய் உறுதிமொழியை கூற நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.

Trending News

Latest News

You May Like