1. Home
  2. தமிழ்நாடு

தீம் பாடலை வெளியிடும் நடிகர் விஜய்..!

1

'அந்தகன்' என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார் பிரசாந்த். 2021 முதல் 2022 வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.நீண்ட நாட்களாக தள்ளிப்போன `அந்தகன்' திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது..

இந்நிலையில், 'அந்தகன்' படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24ம் தேதி வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இப்பாடலை பாடியுள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


 

Trending News

Latest News

You May Like