1. Home
  2. தமிழ்நாடு

வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஜய் அறிக்கை..!

1

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய்.இந்நிலையில் இவர் கட்சி தொடங்கியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்றனர். 

இந்நிலையில் அவர் கட்சி தொடங்கியத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். இந்நிலையில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் “ தமிழ்நாடு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த  பெருமதிப்புக்குரிய  பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய  திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், “ என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like