1. Home
  2. தமிழ்நாடு

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் விஜய் சேதுபதி?

பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் விஜய் சேதுபதி?


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க வைக்க பிரபல இயக்குநர் ஒருவர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்வியலை சித்தரிக்கும் '800' என்ற படத்தில், முத்தையா முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். இதற்கு தமிழகத்தில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.இதனால், விஜய் சேதுபதியின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர் இந்தப் படத்திலிருந்து விலகிக வேண்டும் என முத்தையா முரளிதரன் கோரிக்கை வைத்தை அடுத்து அவர் அப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

தமிழகம்-கேரளா- கர்நாடகா என 3 மாநில போலீசாருக்கும் தண்ணிகாட்டிய சந்தனக்கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை 'வன யுத்தம்' என்ற பெயரிலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை 'குப்பி' என்ற பெயரிலும் இயக்கி வெளியிட்டு பெரும் புகழ் அடைந்தார்.

இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வெப் தொடரில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க வைக்க இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், பிரபாகரனின் கதாபாத்திரத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி மிகவும் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இயக்குநர் ரமேஷ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், விஜய் சேதுபதியின் முடிவு குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Trending News

Latest News

You May Like