1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் பவன் கல்யாணுக்கு நடிகர் விஜய் வாழ்த்து..!

1

நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை இணைந்து ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. 

பவன் கல்யாண் ஆந்திராவின் பிதாபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். ஒய்.எஸ் ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வங்கா கீதாவை வீழ்த்தி 1 லட்சத்து 34 ஆயிரத்து 394 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு செல்கிறார்.

இந்தத் தேர்தலில் தெலுங்குதேசம், பாஜகவுடன் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்தார் பவன் கல்யாண். அவரின் கட்சிக்கு 21 தொகுதிகள் சட்டமன்றத்துக்கும் 2 தொகுதிகள் மக்களவைக்கும் ஒதுக்கப்பட்டது. பவன் கல்யாணுக்கு ஆதரவாக நடிகர் ராம் சரண் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகரும் தவெக தலைவருமான விஜய்,நடிகர் பவன் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.அந்த பதிவில்,   "வாழ்த்துகள் பவன் கல்யாண். உங்களுடைய வலுவான வெற்றியைக் கண்டு மகிழ்கிறேன். ஆந்திர மக்களுக்கு சேவை செய்ய உங்களுடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது" என்று தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like