1. Home
  2. தமிழ்நாடு

சீதாராம் யெச்சூரியின் மறைவிற்கு நடிகர் விஜய் இரங்கல்..!

1

சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், கல்வி மற்றும் ஆராய்ச்சி நோக்கத்திற்காக, மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் சீராம் யெச்சூரியின் மறைவுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது எக்ஸ் பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைகிறேன். முற்போக்கு அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like