நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் பங்கேற்ற நடிகர் விஜய்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மேனகா சுரேஷின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களில் நடித்து வந்த அவர் தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், விஜய்யுடன் பைரவா, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டில் உடன் இன்று திருமணம் செய்துக் கொண்டார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்காக விஜய் கோவா சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. பட்டு வேட்டி பட்டுச் சட்டையில் மாப்பிள்ளை போல செம மாஸாக போஸ் கொடுத்துள்ளார் தளபதி விஜய்.