1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் வடிவேலு ஆதரவாளர் மீது பகிரங்க குற்றச்சாட்டு - கிராம மக்கள் போராட்டம்..!

Q

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுபரமக்குடியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திருவேட்டை உடைய அய்யனார் கோயில், நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோயிலாகும். 

நடிகர் வடிவேலுவின் தூண்டுதலின் பெயரில் கோயில் அறங்காவலர் பாக்யராஜ், கோயிலை ஆக்கிரமிப்பு செய்து அவருக்கு சொந்தமான கோயிலாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த காட்டுபரமக்குடி கிராம மக்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள் கோயிலை முற்றுகையிட்டு நடிகர் வடிவேலுக்கு எதிராக கோஷமிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும், கோயிலுக்கு புதிதாக தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் உருவாக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Trending News

Latest News

You May Like