1. Home
  2. தமிழ்நாடு

சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் சூர்யா அஞ்சலி..!

1

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யா விபத்தில் உயிரிழந்த ரசிகர் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். 

அதாவது, சூர்யா நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் (24) என்பவர் கடந்த 24.08.2023 அன்று சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த செய்தியறிந்த நடிகர் சூர்யா எண்ணூரில் உள்ள ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தி விட்டு, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Trending News

Latest News

You May Like