'கங்குவா' படத் தொகுப்பாளர் நிஷாத் மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல்..!
கங்குவா படத்தின் எடிட்டரான நிஷாத் யூசுப் கேரள மாநிலம் கொச்சியில் இருக்கும் தன் வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு வயது 43. இரவு 2 மணி அளவில் அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இந்த சம்பவம் குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. யூசுபின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் இறந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
நிஷாத் யூசுபின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு கேரளா இயக்குநர்கள் சங்கம் தெரிவித்திருப்பதாவது, 43 வயதான நிஷாத் யூசுப் கொச்சியில் உள்ள தன் வீட்டில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. Thallumala படத்திற்காக கடந்த 2022ம் ஆண்டு சிறந்த எடிட்டருக்கான மாநில விருதை வென்றவர்.நிஷாத் யூசுபின் திடீர் மரணத்தை மலையாள திரையுலகால் அவ்வளவு எளிதில் ஏற்க முடியாது.
மம்மூட்டியின் பசூக்கா, சூர்யாவின் கங்குவா, ஆலப்புழா ஜிம்கானா, தருண் மூர்த்தி- மோகன்லால் சினிமா ஆகிய படங்கள் ரிலீஸாக உள்ளன. அவரின் மரணத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
ஆரோக்கியமாக இருந்த நிஷாத் யூசுப் திடீரென்று இறந்துவிட்டார் என்பதை திரையுலகினரால் நம்ப முடியவில்லை. என்ன அவசரம் என்று அதற்குள் சென்றுவிட்டீர்கள் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் படத் தொகுப்பாளர் நிஷாத் மறைவிற்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.
நிஷாத் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். ஒரு முக்கிய நபராக 'கங்குவா' படக்குழுவினரால் என்றும் நினைவுக் கூறப்படுவீர்கள். நிஷாத்தின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்!"
Heartbroken to hear Nishadh is no more! You’ll always be remembered as a quiet and important person of team Kanguva.. In our thoughts and prayers..! My heartfelt condolences to Nishadh’s family & friends. RIP pic.twitter.com/ClAI024sUe
— Suriya Sivakumar (@Suriya_offl) October 30, 2024