1. Home
  2. தமிழ்நாடு

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசிக்கு நடிகர் சூரி உதவி!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசிக்கு நடிகர் சூரி உதவி!


புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் காமெடி நடிகர் தவசிக்கு பரோட்டா சூரி உதவி செய்ய முன்வந்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரியின் அப்பாவாக நடித்திருந்தவர் நடிகர் தவசி. இவர் நான் கடவுள், ஜில்லா, வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அவருக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்பட்டதை அடுத்து உடல் மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போய் உள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசிக்கு நடிகர் சூரி உதவி!

இந்நிலையில் மருத்துவம் பார்க்க வசதி இல்லாத அவர் தனக்கு உதவிக்கோரி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் அவருக்கு உதவி செய்ய நடிகர் சூரி முன்வந்துள்ளார்.

முதல்கட்டமாக 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்த சூரி, மருத்துவமனையில் இருக்கும் தவசிக்கும், அவரது உதவியாளருக்கும் மூன்று வேளை உணவு வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் உதவிகள் செய்ய தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like