1. Home
  2. தமிழ்நாடு

பழனி முருகன் கோவிலில் நடிகர் சுந்தர் சி மற்றும் குஷ்பூ..!

Q

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி மற்றும் அவரது மனைவி நடிகை குஷ்பூ தனது மகள் மற்றும் உறவினர்களுடன் பழனி மலை கோவிலில் தனது 25 ஆம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடும் விதமாக முருகனுக்கு நடிகர் சுந்தர் சி முடிகாணிக்கை செலுத்தி நேர்த்தி கடன் செலுத்தினார்.

மேலும் விழா பூஜைகளில் கலந்து கொண்டு சன்னியாசி அலங்காரத்தில. குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கி மரியாதை செய்யப்பட்டன.

பின்னர் சுந்தர் சி சார்பில் இன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை வழங்கப்பட்டது. பழனி கோவிலில் சுந்தர் சி மற்றும் நடிகை குஷ்புவை பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.


 


 

Trending News

Latest News

You May Like