#BREAKING : நடிகர் சுதீப்பின் தாயார் காலமானார்..!
நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா இன்று (அக்.20) காலமானார்.
சரோஜா சஞ்சீவ் இன்று காலை 7 மணியளவில் ஜெயநகர் அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவர் சில காலமாக வயது தொடர்பான உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை அளித்தும் குணமடையாமல், அதிகாலையில் உயிரிழந்தார்.
நடிகர் குடும்பம் தற்போது சோகத்தில் ஆழ்ந்துள்ளது.