நடிகர் சிவகார்த்திகேயன் தன் மகனுக்காக போட்ட போஸ்ட்... குவியும் வாழ்த்துக்கள்..!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று அசத்தி வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி பிறகு திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர், மற்றும் நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே ஆர்த்தியை திருமணம் செய்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் அவருடைய மகள் ஆராதனா கனா திரைப்படத்தின் மூலம் வாயாடி பெத்த புள்ள பாடலின் சில பகுதிகளை பாடி ஒரு பாடகியாக மாறிவிட்டார்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் இரண்டாவது மகன் குகனின் பிறந்தநாள் இன்று.அதனால் தன்னுடைய மகனோடு எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார். "பிறந்தநாள் வாழ்த்துக்கள் குகன் லவ் யூ" என்று அவர் வெளியிட்ட பதிவுக்கு வாழ்த்துக்களும் லைக்குகளும் குவிந்து கொண்டிருக்கிறது.