நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 'உழவர்களின் தோழன்' விருது..!

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து சினிமா நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன் ஆவார். பாண்டியராஜ் இயக்கத்தில் மெரினா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிய இவர் இன்று முன்னணி நடிகராக திகழ்கிறார்.
இவ்வாறு இருக்கும் இவருக்கு திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற ‘தேசிய நெல் திருவிழாவில்' நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ‘உழவர்களின் தோழன்' என்ற விருது வழங்கப்பட்டது.
#JUSTIN
— News18 Tamil Nadu (@News18TamilNadu) June 22, 2024
திருத்துறைப்பூண்டி நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன்#Sivakarthikeyan #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/SLZLq9b49r
திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமன் பராமரிப்பு பண்ணை சார்பில் இன்று (ஜூன் 22) தேசிய நெல் திருவிழா தொடங்கியது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவருக்கு 'உழவர்களின் தோழன்' என்ற விருது வழங்கப்பட்டது. பாரம்பரிய நெல் ரகங்களை கொண்டாடும் விதமாக பல நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விழா 2 நாட்கள் நடைபெறுகிறது