1. Home
  2. தமிழ்நாடு

நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாளையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

Q

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுதந்திர போராட்ட வீரரும், கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோழர் நல்லக்கண்ணுவிற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த உறுப்பினரும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான நல்லகண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவர் பிறந்த ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு நல்லகண்ணு பெயர் வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று நூறாவது பிறந்தநாள் கொண்டாடும் விடுதலைப்போராட்ட வீரர், ஈடுஇணையற்ற மக்கள் தலைவர் பெருமதிப்பிற்குரிய திரு.நல்லகண்ணு ஐயா அவர்களை நேரில் சந்தித்து எனது அன்பையும் வணக்கங்களையும் தெரிவித்ததில் பெரும் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like