1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் சிவகார்த்திகேயன் தனது 3வது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டினார்..!

1

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மூன்றாவது குழந்தை பெற்றெடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் உள்ளார்கள்.

சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஜூன் 2ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில், #BlessedWithBabyBoy என்ற ஹேஷ் டாக்குடன், "எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவுக்கும் (மகள்), குகனுக்கும் (முதல் மகன்) நீங்கள் தந்த அன்பையும், ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம். நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தனது 3வது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டிய, அந்நிகழ்வின் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதே போல் பவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்  
 


 

Trending News

Latest News

You May Like