1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் சித்திக்கின் மூத்த மகன் ரஷீன் சித்திக் காலமானார்..!

Q

நடிகர் சித்திக்கின் மூத்த மகன் ரஷீன் சித்திக் (37) காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக கேரளாவின் கொச்சி அருகே பாலாரிவட்டம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. இன்று மாலை 4 மணிக்கு படமுகல் ஜும்ஆ மஸ்ஜிதில் உடல் அடக்கம் செய்யப்படும்.
நடிகர் சித்திக் தமிழில், ஜனா, ரங்கூன், வைகை எக்ஸ்பிரஸ், பாஸ்கர் ஒரு ராஸ்கல், வெந்து தணிந்தது காடு, வரலாறு முக்கியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like