தாத்தா - வாக மாறும் நடிகர் சீயான் விக்ரம் !!

நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதா. கடந்த 2017 ஆம் ஆண்டு மனுரஞ்சித் என்பவரை திருமணம் செய்தார். இந்த திருமணம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிலையில் அக்ஷிதா தற்போது கர்ப்பமாக உள்ளார்.
விரைவில் அவர் தாயாக போவதாக செய்தி அறிந்து விக்ரம் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி விக்ரம் விரைவில் தாத்தா என்ற பதவியை அடைய போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்த செய்தி அறிந்ததும் விக்ரம் மகளுக்கும் விக்ரமுக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இன்னும் இளம் நடிகைகளுடன் டூயட் பாடும் விக்ரம், விரைவில் தாத்தாவாக போகிறார் என்ற செய்தி திரையுலகை சேர்ந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியம் தான்.
இந்த நிலையில் விக்ரம் மகள் அக்ஷிதா கர்ப்பம் ஆனதை அடுத்து ஒரு சிறிய விழாவாக அவரது குடும்பத்தினர் கொண்டாட திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. விக்ரம் தற்போது அஜய்ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா , கவுதம் மேனன் இயக்கி வரும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் ஒரு படம் நடிக்க போகிறார், இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Newstm.in