1. Home
  2. தமிழ்நாடு

ஸ்க்விட் கேமில் நடித்த பிரபல நடிகருக்கு 8 மாத சிறை..!

1

உலகம் முழுவதும் வரவேற்பு பெற்ற கொரிய தொடர் ‘ஸ்குவிட் கேம்’. இவர் நடித்தவர் ஓ யோங்-சு. அந்த கதாபத்திரத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் குளோப் விருது பெற்றார். இந்த விருதை பெறும் முதல் தென் கொரிய நடிகர் இவர்தான்.

squid

ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் தகவல்படி, சுவோன் மாவட்ட நீதிமன்றம் ஓ யோங்-சுவுக்கு எட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்கு எந்தவித நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 79 வயதான ஓ யோங்-சு, இரண்டு முறை பாலியல் துன்புறுத்தல் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தில் உண்மைத்தன்மை இருப்பதாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2017-ல் கொரியாவின் கிராமப்புற பகுதியொன்றில் நாடகத்துக்காக அவர் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. 2022-ல் அடையாளம் தெரியாத பெண்ணை 2 நிகழ்வுகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

jail

இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யவிருப்பதாக ஓ யோங்-சு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 7 நாள்கள் மேல்முறையீட்டுக்கான அவகாசம் நீதிமன்றத்தில் அளிக்கப்படும். தென்கொரிய சினிமா துறையில் பலர் மீது இதுபோன்ற பாலியல் ரீதியான குற்றச்சாட்டு வெளிவருவது அடிக்கடி நிகழ்கிறது.

Trending News

Latest News

You May Like