1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் சத்யனின் பரிதாப நிலை..! முன்பு 500 ஏக்கர் தோப்பு.. ஆனா இப்போ ஒண்ணுமே இல்லை..?

1

விஜயின் நண்பன் படத்தில் "சைலன்சர்" கேரக்டரில் பின்னி பெடலெடுத்தவர் காமெடி நடிகர் சத்யன். இவரை நினைவு கொள்ள இந்த ஒரு வசனம் போதும், அது தான், 'ஹே தோத்தாங்குளீஸ் ஹாவிங் ஃபன்னா'.

சூர்யாவின் காதலே நிம்மதி படத்தில் சிறிய ரோலில் நடித்தவர், 2000ம் ஆண்டு இளையராஜா இசையில் வெளிவந்த இளையவன் படத்தின் சத்யன் ஹீரோவாக அறிமுகமானார். இதற்கு பிறகு கண்ணா உன்னை தேடுகிறேன் படத்திலும் ஹீரோ. ஆனால் ஹீரோவாக நடித்த இந்த இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனால், மீண்டும் குணச்சித்திரம் பக்கம் திரும்பினார்.

அப்படியே மெதுவாக முன்னணி நடிகர்களின் நண்பனாக காமெடி பக்கம் தலைகாட்டினார். இதுவரை 70 படங்களில் நடித்திருந்தாலும் நண்பன், துப்பாக்கி, நவீன சரஸ்வதி சபதம் போன்ற பல படங்கள் இவரை மக்கள் மத்தியில் ரீச் ஆக்கின. அதுவும் விஜயின் நண்பன் மற்றும் துப்பாக்கி படங்களின் இவரின் கேரக்டர்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியானாக வளர்த்திருக்கிறார் சத்யன். காமெடி நடிகராக அறியப்படும் சத்யனுக்கு இன்னொரு பின்னணியும் இருக்கிறது.

நடிகர் என்பதை தாண்டி சத்யன் ஒரு ஜமீன்தார் வீட்டு பிள்ளை. கோயம்புத்தூர் வட்டத்தில் பிரபலமான ஊர் மாதம்பட்டி. தற்போது சமையலுக்கு பெயர் பெற்ற ஊராக இருக்கும் இந்த மாதம்பட்டியின் ஜமீன் தான் மாதம்பட்டி சிவக்குமார். பல கோடி சொத்துக்களுக்கு அதிபதி இவர். அக்காலத்தில் இவர்களின் பரம்பரை குறுநில அரசர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. மாதம்பட்டி சிவக்குமாரின் ஒரே மகன் தான் சத்யன். மாதம்பட்டியில் இவர்களின் பங்களா மட்டுமே 5 ஏக்கரில் இருக்குமாம். இதனை தவிர பல நூறு ஏக்கர் கணக்கில் தோப்பு, சொத்துக்கள் இருந்திருக்கிறது.


ஆனால் இப்போது அவர்களிடம் எந்த சொத்தும் இல்லை. அனைத்தையும் விற்றுவிட்டார்களாம். அதாவது, மாதம்பட்டி சிவகுமாருக்கு சினிமா மீது கொள்ளை பிரியம். தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களான மார்க்கண்டேயன் சிவகுமார் மற்றும் சத்யராஜ் இருவரும் இந்த மாதம்பட்டி ஜமீனுக்கு உறவினர்கள் தான். அதிலும் மாதம்பட்டி சிவகுமாரின் அத்தை மகன் தான் நடிகர் சத்யராஜ். அதனால் வீட்டின் எதிர்ப்பை மீறியும் சினிமாவில் நடிக்க வந்த சத்யராஜுக்கு மாதம் உதவித்தொகை அனுப்பி உதவினார் மாதம்பட்டி சிவகுமார்.


பின்னாளில் அவரே சினிமா படங்களை தயாரிக்கிறார். சில படங்கள் தோல்வியை தழுவியிருக்கின்றன. இதன்பின் சொத்துக்களை விற்க தொடங்கியிருக்கின்றனர். ஒருகட்டத்தில் தனது ஒரே மகனான சத்யனையும் சினிமாவில் அறிமுகப்படுத்த நினைக்கிறார் மாதம்பட்டி சிவகுமார். இதனால் தானே தயாரிப்பாளராக 'இளையவன்' படத்தை தயாரிக்கிறார். இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படி எதிர்பாரா தோல்விகளால் நஷ்டத்தை சந்தித்த மாதம்பட்டி குடும்பம், தங்களுக்கு இருந்த சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று வந்துள்ளது.


மாதம்பட்டி சிவக்குமார் இறந்துவிட, கடைசியாக சில வருடங்கள் முன் மாதம்பட்டியில் இருந்த தங்களது பங்களாவையும் விற்று சென்னைக்கே குடியேறியிருக்கிறார் நடிகர் சத்யன். ஒருகாலத்தில் மாதம்பட்டியின் ஜமீனாக அந்த ஊர் மக்களால் குட்டி ராஜா என அழைக்கப்பட்ட நடிகர் சத்யன், தனது பூர்வீக சொத்துக்களை எல்லாம் விற்று இப்போது சொந்த ஊருக்கே செல்வதையே தவிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் 

Trending News

Latest News

You May Like