மருத்துவமனையில் நடிகர் ரோபோ சங்கர்..! வெளியான HEALTH UPDATE
சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சிகளில் கலக்கி வந்த ரோபோ சங்கர், வெள்ளித்திரையில் புலி, விஸ்வாசம், மாரி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இதனிடையே உடல்நலக் குறைவு காரணமாக மெலிந்து காணப்பட்ட ரோபோ சங்கர், படப்பிடிப்பு தளத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து, துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்குப்பின் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் சுயநினைவுடன் இருப்பதாக அவரது மகள் இந்திரஜா கூறியுள்ளார். நேற்று ஷூட்டிங்கின்போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கர், தனியார் ஹாஸ்பிடல் ஒன்றில் ICU-வில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் பரவியது. இதனிடையே, மயக்கத்திற்கு LOW BP தான் காரணம் எனவும் தனது தந்தை விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.