நடிகர் ரவி மோகன் - கார்த்தி திடீர் சபரிமலை பயணம்..!

நடிகர் ரவி மோகனும், கார்த்தியும் இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இருவரும் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதில் நடிகர் கார்த்தி ஐயப்பனுக்கு உகந்த கருப்பு நிற உடை அணிந்து இருமுடி சுமந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். அதேபோல் நடிகர் ரவி மோகன் நீலநிற ஆடை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
ரவி மோகன், கார்த்தி ஆகியோர் ஐயப்பன் கோவிலுக்கு சென்ற போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதில் ரவி மோகன் ஏற்கனவே சபரிமலைக்கு சென்ற அனுபவம் கொண்டவர். இதற்கு முன்பு நடிகர் ஜெயராமுடன் அவர் சபரிமலை சென்றிருந்தார்.
கார்த்தி முதல் முறையாக விரதம் கடைப்பிடித்து இருமுடி கட்டி சபரிமலை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் திடீரென்று சபரிமலை செல்வதற்கான காரணம் குறித்த விபரம் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.ரவி மோகன், கார்த்தி ஆகியோர் ஐயப்பன் கோவிலுக்கு சென்ற போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
Ravi Mohan - Karthi - Dileep pic.twitter.com/OIRPD29DoC
— Mollywood BoxOffice (@MollywoodBo1) April 17, 2025
Ravi Mohan - Karthi - Dileep pic.twitter.com/OIRPD29DoC
— Mollywood BoxOffice (@MollywoodBo1) April 17, 2025