1. Home
  2. தமிழ்நாடு

Happy Street நிகழ்ச்சிக்கு எதிராக கொந்தளித்த நடிகர் ரஞ்சித்..!

1

சமீபத்தில் பாரம்பரிய நிகழ்ச்சிய ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஞ்சித், “ அந்த காலத்தில் நிலா சோறு உள்ளிட்ட அனைத்திலும் எல்லாரும் ஒற்றுமையாக அமர்ந்து பாடல் பாடி கேட்போம். ஆனால் இப்போது ஒரே வீட்டில் 15 பேர் இருந்தால் கூட செல்போனுடன் இருக்கிறார்கள். சமீப காலமாக நிறைய மன கசப்பான விஷயங்கள் நடக்கிறது. அது உங்க எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்.

இப்போது ஒரு கலாச்சாரம் வந்து இருக்கிறது. தெருவில் ஹேப்பி சண்டே, ஹேப்பி ஸ்ட்ரீட் நடத்துகிறார்கள். எங்க இருந்து டா வரீங்க.

பெண்கள் அரைகுறை ஆடையுடன் அதில் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் எந்த ஆணுடனும், எந்த பெண்ணுடனும் ஆடலாம் என்ற நிலை உருவாகி இருக்கிறது. இது தமிழ் கலாச்சார் சீரழிவை நோக்கி செல்கிறது. 

உங்க அம்மா, அப்பா எல்லாம் யாரு. பெண்கள் அரைகுறை ஆடையுடன் தெருவில் நிற்க வைப்பது வேதனையாக இருக்கிறது. எனக்கு அரசு அதிகாரம் மட்டும் இருந்தால் பிடித்து ஆயுள் தண்டனை கொடுத்து இருப்பேன். 

உடற்பயிற்சி, யோகாவிற்கு எல்லாம் செல்லலாமே. நான் அதை எல்லாம் தவறு சொல்லவில்லை. 

யார் மகனோ, யார் மகளோடு நடனமாடுவது. மன அழுத்தம் போக்க தெரிவில் இறங்கி கூத்தடிப்பதற்கு பல பாராட்டுகள் அதற்கு ஆதரவும் தருகிறார்கள். இந்த மாதிரி கலச்சாரம் தான் அடுத்த அழிவுக்கு கொண்டு சேரும்.  நல்லதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் “ என்றார். 


 

Trending News

Latest News

You May Like