திடீரென நடிகர் ரஜினிகாந்த் டெல்லி பயணம்..!

நடிகர் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 'நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கும், மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் பிரதமர் மோடிக்கும் வாழ்த்துகள்'. இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றுள்ளார். மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள டெல்லி சென்றாரா ரஜினிகாந்த்? என்று இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.