நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் மாதம் கட்சி தொடங்குகிறார் - கராத்தே தியாகராஜன் ..

நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் மாதம் கட்சி தொடங்குகிறார் - கராத்தே தியாகராஜன் ..

நடிகர் ரஜினிகாந்த் நவம்பர் மாதம் கட்சி தொடங்குகிறார் - கராத்தே தியாகராஜன் ..
X

நான் அரசியலுக்கு வருவேன் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி அறிவித்தார். இதற்காக தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் இயக்கமாக மாற்றினார். இதன் பின்னர், இயக்கத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அவரது நிர்வாகிகள் ஈடுபட்டனர்.

இதன் பணியும் முடிந்துவிட்டது. தற்போது, ரஜினி கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர வேண்டியதுதான் பாக்கி. ஏப்ரலில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட் கூறியிருந்தார்.

கொரோனாவால் தற்போது அந்த அறிவிப்பு தள்ளிபோய் விட்டது. இந்த நிலையில், நவம்பர் மாதத்தில் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது நண்பரும், என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகியுமான கராத்தே தியாகராஜன் தற்போது கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் ; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நவம்பர் மாதத்திற்குள் கட்சி ஆரம்பிப்பார். ஸ்டாலின் கூறிய `ஒன்றிணைவோம் வா’ மக்களை சென்றடையவில்லை. ரஜினி கூறிய சும்மா விடக்கூடாது கருத்து உலகளவில் சென்றடைந்தது என்று கூறினார்.

Newstm.in

Next Story
Share it