மும்பை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த்..!
காலா, தர்பார் மற்றும் அண்ணாத்த போன்ற படங்கள் சரியாக ஓடாத நிலையில் அப்செட்டாக இருந்தால் ரஜினிகாந்துக்கு கடந்தாண்டு வெளியான ஜெயிலர் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இண்டஸ்ட்ரி ஹிட் அந்த படம் அடித்த நிலையில், தொடர்ந்து சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார்.
இறுதி கட்டப் படப்பிடிப்பு: ஏற்கனவே வேட்டையன் படத்தின் சில காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டன. அமிதாப் பச்சன் அந்த காட்சிகளில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருந்தார். மீண்டும் தற்போது மும்பையில் சில காட்சிகளை படமாக்க ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்த நிலையில் அங்கிருந்து விமானம் மூலம் மும்பைக்கு கிளம்பிச் சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.வேட்டையன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் கூலி படத்தின் சூட்டிங் நடிகர் ரஜினிகாந்த் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.