பிரபல நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காலமானார்..!
ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரிக்கு நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவர் ஹைதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.
காயத்திரிக்கு 38 வயது. ராஜேந்திர பிரசாத்துக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஒரு முன் வெளியீட்டு விழாவில், ராஜேந்திர பிரசாத் தனது மகள் காயத்ரி மற்றும் அவருடனான தனது பிணைப்பு பற்றி உணர்ச்சிகரமாக பேசினார். ராஜேந்திர பிரசாத்துக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
காயத்ரியின் மகள் சாய் தேஜஸ்வினி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.