1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் புதிய சேவை மையத்தை தொடங்குகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ்..!

1

ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் மட்டும் பணியாற்றாமல் அவரது பெயரில் பல ஆசிரமங்களை நடத்தி வருகிறார். பல நற்பணி செய்லகளை மக்களுக்காக செய்து வருகிறார். அதைத்தொடர்ந்து ராகவா லார்ன்ஸ் தற்பொழுது மாற்றம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார். அந்த அமைப்பின் மூலம் இல்லாத மக்களுக்கும் தேவையுள்ள மக்களுக்கும் சேவை செய்ய போகிறார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ள அவர், நான் உதவி செய்த மாணவர்கள் இப்போது மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவுக்கு வளர்ந்து வந்திருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. அதனால் எதிர்காலத்தில் நான் செய்துவரும் இந்த சேவையானது மாற்றம் என்ற இந்த சேவை மையத்தின் மூலம் இன்னும் பெரிய அளவில் ஏழை எளிய மக்களுக்கு கிடைக்கப் போகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் எஸ்ஜே சூர்யாவும் இந்த மாற்றம் அமைப்பில் சேர்ந்து தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றும், மே 1 மாஸ்டர் யாரை காண்பித்து உதவி செய்ய கூறினாலும் நான் செய்வேன் என பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like