ரசிகர்களை நேரில் சந்திக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ்.. இடம் மற்றும் தேதி அறிவிப்பு..!

கடந்த 2018ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸின் தீவிர ரசிகர் ஆர்.சேகர் என்ற ரசிகர் லாரன்ஸை நேரில் சந்தித்து புகைப்படம் எடுப்பதற்காக சென்னை வரும் போது விபத்து ஏற்பட்டு எதிர்பாராத விதமாக இறந்து போனார். இதனால் லாரன்ஸ் வருத்தமடைந்து அதிரடி முடிவு ஒன்றை எடுத்தார்.
இனி எந்த ஒரு ரசிகரும் என்னை பார்க்க சென்னைக்கு வர வேண்டாம்.வரும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க விரும்புகிறேன்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்கள் இருக்கும் இடங்களுக்கே நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
சந்திக்கும் இடம் நேரம் தேதி ஆகிய தகவல்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும் என்ன கூறினார். இந்நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் ரசிகர்களை சந்திக்கும் திட்டத்தில் இருக்கிறாராம். இது குறித்து அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவையும் பகிர்ந்திருக்கிறார் ராகவா லாரன்ஸ்.
ரசிகர்களுடன் போட்டோ எடுப்பதற்கான பயணத்தை நாளை முதல் துவங்குகிறேன்.. எனது பயணத்தின் முதல் இடம் விழுப்புரம், அங்கு இருக்கும் யோகலட்சுமி மஹாலில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் என பகிர்ந்திருக்கிறார்.
Hi friends and fans, Last time during a fans meet photoshoot in Chennai, One of my fan met with an accident and lost his life. It was so heartbreaking. On that day, I decided that my fans shouldn’t travel for me but I will travel for them and organize a photoshoot in their town.… pic.twitter.com/lIdnJuKbhX
— Raghava Lawrence (@offl_Lawrence) February 24, 2024