பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது..!

விசிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்தவரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான "அம்பேத்கர் சுடர்" விருதினை திரைப்படக் கலைஞரும் மதச்சார்பின்மைக்காக சமரசமில்லாமல் போராடி வருபவருமான பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருதினை திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழிக்கும் வழங்குவதில் பெருமைப்படுகிறோம் என தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான #விசிக_விருதுகள்:
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 29, 2024
திரைநாயகர் திரு.#பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு 'அம்பேத்கர் சுடர் ' விருது!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!
------------------------------
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில்… pic.twitter.com/3Fkg4MJHM9