1. Home
  2. தமிழ்நாடு

நீண்ட நாள் காதலியைக் கரம் பிடித்தார் நடிகர் பிரதீப் ஆண்டனி..!

1

 பிக்பாஸ் சீசன் 7ல் மிகவும் பிரபலமான போட்டியாளரான பிரதீப் ஆண்டனி சில காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டார்.

தகாத வார்த்தைப் பிரயோகம் மற்றும் பெண் போட்டியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என சக போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பாதியிலேயே பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டார். இதற்கு பிரதீப்பின் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவருக்கு படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தன.

இந்நிலையில் பிரதீப் ஆண்டனி நேற்று தனது காதலி பூஜாவை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துள்ளார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


 

Trending News

Latest News

You May Like