1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் பொன்னம்பலம் உருக்கமான ஆடியோ..!

Q

தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் சில இந்தி படங்களிலும் நடித்த நடிகர் பொன்னம்பலம், ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து பிரபலமானவர்.
 
கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாகப் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த பொன்னம்பலத்திற்கு, தற்போது மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து பொன்னம்பலம் வெளியிட்டுள்ள ஆடியோவில், "கடந்த பிப்ரவரி மாதம் முதல் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன். மீண்டும் சிறுநீரக தொற்று எனக்குப் பரவியுள்ளது. ஆசனவாய் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் தரைமட்டத்துக்கு வந்துவிட்டேன்," என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
 
மேலும், தனக்கு உதவிய நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார், தனுஷ், கே.எஸ். ரவிக்குமார், நிழல்கள் ரவி, ரவி மோகன் சிம்பு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொண்டதோடு, "எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று உருக்கமாக அவர் கேட்டு கொண்டுள்ளார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Trending News

Latest News

You May Like