மன்னிப்பு கேட்டார் பிரபல நடிகர் பார்த்திபன்..!
நடிகர் பார்த்திபன் இயக்கிய பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல், வித்தியாசமான கதையம்சம் என்ற பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அந்த வகையில் இவர் இயக்கிய ஒத்த செருப்பு, இரவின் நிழல் உள்ளிட்ட பாராட்டுக்களை பெற்றதோடு விருதுகளையும் குறித்தது.
இரவின் நிழல் படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்து அசத்திய பார்த்திபன், அடுத்து டீன்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்த இந்த படத்தில், யோகிபாபு, பார்த்திபன் ஆகியோருடன் பல நடிகர்கள் நடித்திருந்தனர். மூட நம்பிக்கைக்கு எதிரான சையின்ஸ் பிக்ஷன் படமான டீன்ஸ் படம் கடந்த ஜூலை 12-ந் தேதி இந்தியன் 2 படத்துடன் வெளியானது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தியன் 2 மோசனமான விமர்சனங்களை பெற்றதால், டீன்ஸ் படத்திற்கு தியேட்டர்கள் அதிகரித்தது.
டீன்ஸ் படம் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்த பார்த்திபன், இப்போது கதை இருக்கா இல்லையா என்று யாரும் பார்ப்பதில்லை. படத்தில் தமன்னா டான்ஸ் இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். அவர்களின் டான்ஸ் இருந்தால் அந்த படம் ஹிட்டாகிவிடும் என்று நம்புகிறார்கள் என்று பேசியிருந்தார். பார்த்திபனின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடிய காவாலா பாடல், அரண்மணை 4 படத்தின் இறுதியில் வந்த பாடல்களை தான் பார்த்திபன் சொல்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றன்றனர்.
இது குறித்து பார்த்திபன் தனது தளத்தில், "ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை பாதியாக வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும் இயக்குநர்களையும் மதிப்புடன் உயர்ந்தே பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதை புண்படுத்தியிருந்தாலும் மன்னிக்கவும்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நண்பர்களே!
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 19, 2024
ஒரு கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை, பாதியாய் வெளியிடும் போது பாதிப்பு எனக்காகிறது. நான் எல்லா நட்சத்திரங்களையும், இயக்குனர்களையும் மதிப்புடன் உயர்ந்தேப் பார்ப்பவன். எனவே அப்பதிவுகள் யார் மனதைப் புண்படுத்தி இருந்தாலும்
மன்னிக்க வேண்டுகிறேன். pic.twitter.com/lq9MtIXBvo