1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகர் மைம் கோபி வீட்டில் நேர்ந்த மரணம்! சோகத்தில் குடும்பத்தினர்..!

1

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் வின்னரான மைம் கோபி, தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பயணித்து வருகிறார். இந்நிலையில் மைம் கோபியின் அம்மா வயது மூப்பு காரணமாக தற்போது காலமாகியுள்ளார். அவர் தொடர்ந்து உடல்நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் கொளத்தூரில் உள்ள மைம் கோபியின் வீட்டில் அவரது அம்மாவின் இறுதிச்சடங்குகள் இன்று மாலை நடைபெறவுள்ளதாக மைம் கோபி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மைம் கோபி, தன்னுடைய அம்மா குறித்து தன்னுடைய நெகிழ்ச்சியை பகிர்ந்திருந்தார். கருவறையில் இருந்து தன்னுடைய அம்மா தன்னை எடுக்கவில்லை என்றால் தான் காணாமல் போயிருப்பேன் என்றும் தாய் என்பது அழகான பெண் என்றும் அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். தொடர்ந்து தாய்க்கு பின் தாரம் என்று தன்னுடைய மனைவி குறித்தும் அந்த நிகழ்ச்சியில் பாராட்டியிருந்தார்.

Mime Gopi

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார் மைம் கோபி. சைன்போர்ட் ஆர்ட்டிஸ்ட், மைம் ஆர்ட்டிஸ்ட் என பல தளங்களில் பயணித்துவரும் மைம் கோபியின் அம்மா மறைவிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். தனுஷின் மாரி படம், ரஜினிகாந்தின் கபாலி, கார்த்தியின் மெட்ராஸ், தெலுங்கில் அல்லு அர்ஜுனின் புஷ்பா என அடுத்தடுத்த படங்கள் மூலம் மைம் கோபி கவனம் பெற்று வருகிறார்.

Trending News

Latest News

You May Like