நடிகர் மன்சூர் அலிகான் மகனிடம் போலீஸ் விசாரணை..!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் மன்சூர் அலிகான்.இவரின் மகன் துக்ளக்.
இந்நிலையில்,பிரபல நடிகர் மன்சூர் அலிகான் மகன், துக்ளக் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கஞ்சா வியாபாரிகளுடன் அவர் தொடர்பில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், சென்னை திருமங்கலம் போலீசார் துக்ளக்கிடம் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணைக்கு பின்னரே அவர் கைது செய்யப்படலாம் அல்லது சந்தேக வளையத்திற்குள் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை திருமங்கலம் காவல்துறையினர் இதுதொடர்பான விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர்.