1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் மன்சூர் அலிகான் கட்சியின் பெயர் மாற்றம்..!

1

நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்த வந்த நிலையில் திடீரென அவர் அந்தக் கட்சியில் இருந்து கடந்த 2021 ல் வெளியேறி தமிழ் தேசிய புலிகள் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அந்த கட்சியின் சார்பில் அவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.  இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்  தன்னுடைய அமைப்பின் பெயரை தற்போது மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் தேசிய புலிகள் என்ற தன்னுடைய அமைப்பை இந்திய ஜனநாயகப் புலிகள் என பெயர் மாற்றம் செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.  ஜனவரி 26 ம் தேதி காலை 9 மணிக்கு இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயர் மாற்றத்தை அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 ஜனவரி 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்திய ஜனநாயக புலிகள், முன்னர் தமிழ் தேசிய புலிகள் என அறியப்பட்டவை. தங்களது அடையாளம் மற்றும் தீர்மானத்தின் ஒரு கணிசமான மாற்றத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.இந்த மாற்றம் ஜாதி வெறியை நீக்கி கல்வி மற்றும் சமத்துவ உரிமைகளை அனைவருக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு உறுதி செய்வதில் உள்ள அக்கறையை பிரதிபலிக்கிறது.

தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நமது இயக்கத்தை  விரிவுபடுத்தும் இந்த புதிய பயணத்தின் மூலம் நாம் சமூக நீதியை மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like