1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் மன்சூர் அலிகானுக்கு விதித்த ரூ.1 லட்சம் அபராதம் ரத்து..!

1

நடிகை த்ரிஷா குறித்து சா்ச்சை கருத்துகள் தெரிவித்ததாக, நடிகா் மன்சூா் அலிகானுக்கு, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, நடிகா் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிா்ப்பைத் தெரிவித்திருந்தனா். நடிகா் சங்கமும் மன்னிப்புக் கேட்கும்படி, மன்சூா் அலிகானை வலியுறுத்தியது..இந்த நிலையில், தேசிய மகளிா் ஆணையத்தின் பரிந்துரைப்படி, சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில், நடிகா் மன்சூா் அலிகானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் மன்சூா் அலிகான் மன்னிப்புக் கோரினாா்.  தனது நற்பெயருக்குக் களங்கம் கற்பித்ததாகக் குற்றம்சாட்டி, த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ரூ. 1 கோடி மான நஷ்டஈடு கேட்டு, நடிகா் மன்சூா் அலிகானுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து தனது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மன்சூர் அலிகான் தரப்பில், திரிஷா, குஷ்பு ஆகியோர் தமிழகத்தில் இருக்கும் நிலையில், சிரஞ்சீவி மட்டும் ஆந்திராவில் இருப்பதால் தான் அவருக்கு எதிராக வழக்குத்தொடர அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்ததாகவும், ஆனால் வழக்கு அபராதத்துடன், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், மற்ற இருவர் மீதான வழக்கையும் தொடர விரும்பவில்லை எனவும் மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டனர். அதேசமயம், வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்.
 

Trending News

Latest News

You May Like