1. Home
  2. தமிழ்நாடு

நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்..!

1

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தனது பாடி லேங்குவேஜ், ஃபேஸ் எக்ஸ்பிரஷன்கள் மூலம் சிரிக்க வைத்து வந்த சேஷு சந்தானம் நடிப்பில் வெளியான பல படங்களிலும் அவருடன் காம்பினேஷன் காட்சிகளில் நடிக்க வைத்து சிரிக்க வைத்துள்ளார். தொடர்ந்து அவர் சந்தானம், யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

கடந்த 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேஷு அனுமதிக்கப்பட்டார். அவரது இதயத்தில் அடைப்பு இருப்பதாக கூறப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இலவச திருமணம், கல்வி, மருத்துவத்துக்காக பலருக்கும் சேஷு நிதியுதவி வழங்கியதை நினைவுகூர்ந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like